iyesuvaik kanpoom – Yesuvai Kanbom

இயேசுவைக் காண்போம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசுவைக் காண்போம் – Yesuvai Kanbom
இயேசுவைக் காண்போம் இயேசுவைக் காண்போம் வாழ்வும் வழியும் உண்மையுமான இயேசுவைக் காண்போம்
அன்பு மிகுந்தவர் அமைதி நிறைந்தவர் அன்பே கடவுள் அழைக்கிறார் உன்னை அன்பு பணியில் அறநெறியில் சீடர்கள் ஆகுவோம் – வாழ்வைத் தொடருவோம்
2.நீதி நேர்மையில் இரக்கச் செயல்களில் மனித மாண்பு மண்ணில் மலர ஜாதி மதங்கள் இனவெறிமாறி சீடர்கள் ஆகுவோம் வாழ்வைத் தொடருவோம்
வீழ்ந்த மனிதனை இயேசு தூக்கி எடுப்பவர் பாவங்கள் போக்கி நோய்களை நீக்கி தின்மைகள் மாறி நன்மைகள் செய்ய சீடர்கள் ஆகுவோம் – வாழ்வைத் தொடருவோம்
கண்ணீர் துடைப்பவர் இயேசு கவலை தீர்ப்பவர் கண்மணிபோல காப்பார் உன்னை காலமெல்லாம் கனிகள் கொடுக்க சீடர்கள் ஆகுவோம் – வாழ்வைத் தொடருவோம்
இறையாட்சி மலர்ந்திட இயேசு சிலுவையில் பலியானார்
இறந்தும் வாழ்கிறார் இம்மானுவேலாக ஒரே மேய்ப்பனும்
மந்தையுமாகிட(யோ 10:16) சீடர்கள் ஆகுவோம் – வாழ்வைத் தொடருவோம்