iyesu vazhntha thirukkutumpam – yesu Vaalntha Thirukudumbam

இயேசு வாழ்ந்த திருக்குடும்பம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

இயேசு வாழ்ந்த திருக்குடும்பம் – yesu Vaalntha Thirukudumbam
இயேசு வாழ்ந்த திருக்குடும்பம் இனிமையானதே
அதை பேசும் போது இதயம் சொல்லும் உறவில் வாழவே
என்றும் மனிதரெல்லாம் மகிழ்ச்சியோடு வாழணும்
எங்கள் குடும்பமெல்லாம் திருக்குடும்பம் ஆகணும்
இறைவா அருள் தருவாய் இறவா உறவருள்வாய்
ஆண்டவரின் அடிமை என்று அர்ப்பணிப்பர் அன்னை
அன்பு அமைதி தூய்மை மலர ஒப்புவிப்பாள் தன்னை
நேர்மையோடு பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார் தந்தை
பொறுமையோடு கடமையாற்ற நடத்தி செல்வார் விண்ணை
கடவுளுக்கும் மனிதருக்கும் உகவந்தவராய் குழந்தைகள் – 2
நாசரேத்து குடும்பமாக நல்லுறவில் வாழுவோம்
பெறுவதல்ல தருவதிலே தொடங்கும் இன்ப வாழ்வு
அன்பிலும் அறங்களிலும் ஒளிரும் அதன் மாண்பு
கூடி ஒன்றாய் பேசுவதால் கோடி நன்மை சேரும்
குறைகளிலும் ஏற்றுகொண்டால் எல்லாம் இன்பமாகும்
இறையுறவில் வளர்வதாலே இதயம் எல்லாம் நிறைந்திடும் – 2
இறைவனே நம் தலைவராக புதிய உலகம் பிறந்திடும்