iyesu namaththile avar namaththile

இயேசு நாமத்திலே அவர் நாமத்திலே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசு நாமத்திலே, அவர் நாமத்திலே,
இயேசு நாமத்தில் சுகம் உண்டு!
இயேசு நாமத்திலே, அவர் நாமத்திலே,
இயேசு நாமத்தில் ஜெயம் உண்டு!
இயேசு நாமத்திலே, அவர் நாமத்திலே,
இயேசு நாமத்தில் வல்லமை உண்டு!
இயேசு நாமத்திலே, அவர் நாமத்திலே,
இயேசு நாமத்தில் ஆசீர்வாதம் உண்டு!
உம் பேரை சொன்னால் போதும்,
நோய்கள் மறையுதையா!
சுகம் தரும் தெய்வம் நீரே,
என்னை சுகமாக்கும் தெய்வம் நீரே!
என் எல்லையை பெரிதாக்கும்,
என்னை நீர் ஆசீர்வதியும்.
நன்மையும் கிருபையும் தொடர்ந்திடுமே,
என் ஜீவனுள்ள நாட்களெல்லாம்!
பார்வோனின் சேனை வந்தாலும்,
உம் நாமத்தில் மேற்கொள்வோம்.
என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்,
எல்லாம் செய்ய பெலனுண்டு!