1.iyesu namame athisayame

ஆதி அன்பு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.

1.இயேசு நாமமே அதிசயமே
இயேசு நாமமே அற்புதமே
இயேசு நாமமே ஆனந்தமே
இயேசு நாமமே ஆதி அந்தமே
ஆதி அன்பை என்றும் மறவாதிருப்போம்
ஆதியும் அந்தமும் இயேசு ஒருவரே
புறஜாதியான நம்மை தேடி வந்தாரே
ஜீவன் எனது ….ரட்சிதரே
தள்ளப்பட்ட நம்மை தேடி வந்தாரே
மூலைக்கு தலைகளை மாற்றிடவே
உலகின் அன்பு எல்லாம் மாயையே-2
உண்மை அன்பு உன்னதர் அன்பு – ஆதி அன்பு
அசுத்தமான நம்மை தேடி வந்தாரே
பொன்னை போல நம்மை சுத்திகரிக்க
பரிசுத்தமானவரே சுத்திகரியும்
என்னில் உம்மை காணும் வரையில் – ஆதி அன்பு
2.இயேசு நாமமே சமாதானமே
இயேசு நாமமே சுகம் தருமே
இயேசு நாமமே சத்தியமே
இயேசு நாமமே சர்வேசமே
காணாமற் போன நம்மை தேடி வந்தாரே
தூரம் போயினும் சேர்த்து கொண்டாரே
அநாதி சிநேகத்தால் அணைத்து கொண்டாரே-2
ஆதி அன்பை …. மறப்பேனோ
3.இயேசு நாமமே பரிசுத்தமே
இயேசு நாமமே பராக்கிரமமே
இயேசு நாமமே பரவசமே
இயேசு நாமமே பரலோகமே
ஆதி அன்பு பாடல் வரிகள், Aadhi Anbu lyrics