iyesappa iyesappa

இயேசப்பா நீங்க

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசப்பா இயேசப்பா
நீங்க எப்போதப்பா வரப்போறீங்க-2
வருகைக்காக காத்திருக்கும்
பாத்திரம் நானே
உங்க அழைப்புக்காக ஏங்கி
நிற்கும் பாத்திரம் நானே-2
1.இவ்வுலக பாடுகளை உமக்காய் ஏற்றுக் கொண்டு
உம்மோடு வாழ்வதற்காய் எதையும் நான் சகிப்பேன்-2 – வருகைக்காக
2.வியாதிப்பட்ட நேரமெல்லாம் எல்லோரும் கைவிடவே
உம்மை மட்டும் நம்பிக்கொண்டு என் துக்கம் நான் மறப்பேன் -2
-வருகைக்காக
3.வனாந்திர பாதையிலும் வேதனைகள் மத்தியிலும்
உம்மை மட்டும் பற்றிக்கொண்டு
என் சிலுவை நான் சுமப்பேன் -வருகைக்காக