iyakkam alikkum aaviye – Iyakkam Alikkum Aaviyae

இயக்கம் அளிக்கும் ஆவியே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

இயக்கம் அளிக்கும் ஆவியே – Iyakkam Alikkum Aaviyae
இயக்கம் அளிக்கும் ஆவியே இயங்க வைக்கும் ஆவியே
இறைவன் அளித்த நல்வாக்கே
இனி எம்மில் எல்லாமே உமதாக்குவாய் – 2
ஆவியே தூய ஆவியே எம் தாகம் தினம் தீர்க்கும் அருள் ஊற்றே – 2
உமதாற்றல் இல்லாமல் எம் வாழ்வில்லை
உம் வழித்துணை இல்லாமல் பயணம் இல்லை – 2
உம் தூண்டுதல் இல்லாமல் இறைவேண்டலில்லை
உம் பிரசன்னம் இல்லாமல் நிறைவாழ்வில்லை – 2 ஆவியே
துணிவிழந்த சீடர்களை நீ நிரப்பினாய்
இறைவாக்கு எடுத்துரைக்கும் மனத்திடம் தந்தாய் – 2
இறை இயேசுவைத் திருமுழுக்கில் நீ ஆட்கொண்டாய்
எமை முழுதும் அருட்கொடையால் நிதம் ஆட்கொண்டாய் – 2 ஆவியே