ivvazhi nerukkam – Ivvali nerukkam

இவ்வழி நெருக்கம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இவ்வழி நெருக்கம் – Ivvali nerukkam
இவ்வழி நெருக்கம்
சிநேகிதர் சுருக்கம்
யார் இதைக் கடந்திடுவார் ஆ ஆ
இதல்லோ மோட்ச வழி
1.எப்பக்கத்திலேயும் நெருக்கப்பட்டேன்
எல்லா மக்களாலும் கைவிடப்பட்டேன்
நிந்தை அவமானம் நெருங்கி வந்தது
எந்தையே உம்மாலே இதை எல்லாம் கடந்தேன்
2.கண்ணீரின் நிந்தையால் கருத்துப் போனேன்
கர்த்தனே உம்மிலே நிலைத்து நின்றேன்
துன்பத்தின் மத்தியில் அன்பரின்
சத்தத்தால் இன்பத்துள்ளானேன் இயேசுவை அறிந்தேன்
3.பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம்
அதிசீக்கிரமாய் முடிவதாலே
பரிசுத்தமாகுதலை பயத்தோடே காத்து
பரிசுத்தரைக் காணும் நாள் வந்தது