itikkappatta alangkame pazhana pattaname

மறுபடியும் கட்டப்படுவாய்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.

இடிக்கப்பட்ட அலங்கமே பாழான பட்டணமே
மறுபடியும் கட்டப்படுவாய் உன் ஸ்தானத்தில்
கட்டப்படுவாய் திரும்ப கட்டப்படுவாய்
மேளதாளத்தோடு மறுபடி கட்டப்படுவாய்
கட்டி முடிப்பார் இடிந்ததை கட்டி முடிப்பார்
சத்துரு இடித்த உன் வாழ்வையே கட்டி முடிப்பார்
உயரத்தில் உள்ளவர் உன் ஆசைகளை அறிகின்றார்
கண்ணீரை கணக்கில் வைத்து துருத்தியிலே சேர்க்கிறார்
எல் கிபோர் ஆட்ட நாயகரே
மறைந்திருக்க ஒரு நாளும் முடியாதே
எல் கிபோர் ஆட்ட நாயகரே
ஒழிந்திருக்க ஒரு நாளும் முடியாதே
ஆகாது என்று சொல்லி கதவுகளை அடைத்தனர்
வெண்கல கதவை உடைத்து பொக்கிஷத்தை தருவீரே
எல் கிபோர் ஆட்ட நாயகரே
திறந்த வாசலை எனக்காக வைத்தீரே
எல் கிபோர் ஆட்டு நாயகரே
திறந்த வாசலை எனக்காக தருபவரே