ithuve neram ithuve kalam

இதுவே நேரம் இதுவே காலம்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இதுவே நேரம் இதுவே காலம்
ஏற்றிடுவீர் எம் காணிக்கையை
இறஞ்சியே குருவின் கரங்களில் தந்தோம்
ஏக பிதாவே ஏற்றிடுவீர்
1.உருவினில் அப்பமாய் இருந்தாலும் இதை
இறைமகன் உடலாய் மாற்றிடுவீர்
பருக இரசமாய் இருந்தாலும் உந்தன்
திருமகன் இரத்தமாய் மாற்றிடுவீர்
பலி இதனோடு பரம்பொருளே என்
உள்ளம் நிறை யாவும் உரிமை தந்தோம்
2.அனைத்தையும் படைத்த ஆண்டவரே உம்
அருள் நிறை கருணையை வேண்டுகின்றோம்
(பசி இடர் வறுமையில் உன் அருள் வார்த்தையால்
துணிவூக்கம் பெற்று தளைத்திடுவோம்
அளவில்லாத உன் கருணையால் எம்மை
அரவணைத்து வழி நடத்துகின்றீர்