Ithu Yubilee Aandu

இது யூபிலி ஆண்டு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இது யூபிலி ஆண்டு
இது விடுதலை வருஷம்
நித்திய மகிழ்ச்சி தலைமேலிருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போகும்
1.நன்மையும் அவர் கிருபையும்
என்றுமே நம்மைத் தொடர்ந்திடுமே
நம் ராஜா யெகோவாயீரே
தேவைகள் யாவையும் சந்திப்பாரே
2.கட்டுகள் யாவும் நீங்கி விடும்
கண்ணீரை இயேசு துடைத்திடுவார்
சிறையிருப்பை மாற்றிடுவார்
யெகோவா ஷாலோம் என்றும் நம்முடனே
3.இழந்ததை நாம் பெற்றுக் கொள்வோம்
இந்தியாவை நாம் மீட்டுக் கொள்வோம்
யெகோவா நிசி முன் செல்கின்றார்
யுத்தங்கள் நமக்காய் செய்திடுவார்
4.ஜெபத்திற்கு பதில் கிடைத்திடும்
சத்துரு நம் காலின் கீழே
ஜெயக் கொடியை பிடித்துக் கொண்டு
ஜெயமாய் வாழ்ந்திட உதவி செய்வார்