ithu thanoo mey anpu

இது தானோ மெய் அன்பு
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இது தானோ மெய் அன்பு
எனக்காக ஜீவன் தந்த அன்பு
இது தானோ மெய் ஜீவன்
என் மீட்பர் தரும் நித்ய ஜீவன்
என்னை மீட்கவே இயேசு சிலுவை சுமந்தாரே
என் பாவம் போக்கவே அவர் பாவம் ஆனாரே
1.சுவாசம் தந்து வசனம் தந்து
என்னையும் அவர் உயிர்த்தாரே
அழிவே இல்லா இணையும் இல்லா
புது வாழ்விற்காய் என்னை அழைத்தார்
நித்ய வாழ்வையும் பெற்றிடவே – என்னை மீட்கவே
2.கிருபை ஈந்து பெலனும் ஈந்து
என் குறைவுகள் நீக்கி மகிழ்கிறார்
ஆற்றல் தந்து வரங்கள் தந்து
என்னையும் பயன்பெற செய்திட்டார்
என்றும் அவர் எண்ணில் மகிமை பெற
என்னை உயர்த்தவே தன்னை தாழ்த்தினாரே
என்னை பெருகச்செய்யவே இயேசு சிறுமை அடைந்தாரே
இது தானே மெய் அன்பு
எனக்காக ஜீவன் தந்த அன்பு
இது தானே மெய் ஜீவன்
என் மீட்பர் தந்த நித்ய ஜீவன்
என்னை மீட்கவே இயேசு சிலுவை சுமந்தார்
என் பாவம் போக்கவே அவர் பாவம் ஆனாரே