iththanai nala kaththiruntha kirupaiyai

இத்தனை நாளா காத்திருந்த
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இத்தனை நாளா காத்திருந்த கிருபையை
இயேசப்பா நான் உங்களிடந்தான் கண்டேனே
எத்தனாக வாழ்ந்த என்னை மறக்கல
இஸ்ரவேலாய் மாற்றும் வரை கைவிடல
இயேசப்பா உங்க கிருபை தாங்கப்பா – உங்க
கிருபை இல்லாம வாழ முடியாதப்பா
கிருபையே
என் வாழ்வை மாற்ற தேடி வந்த கிருபையே
எல்லாராலும் மறக்கப்பட்டு போனவன் நான்
தூரமாக ஓடி ஒளிந்து வாழ்ந்தவன் நான்
மறக்கவில்லையே என்னை மறக்கவில்லையே
அழைத்தவர் என் வாழ்வைவிட்டு விலகவில்லை
எத்தனையோ மனிதர்களை பார்த்தவன் நான்
உம்மைப்போல ஒருவரையும் காணலையே
புரிந்து கொண்டீரே என்னை அறிந்து வைத்தீரே
அரியணையில் உயர்த்தி வைத்து அழகு பார்த்தீரே