Isaiah-1
ஏசாயா-
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
Isaiah-1 – ஏசாயா-1
1. ஆமோசின் குமாரனாகிய ஏசாயா, யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களில், யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம்.
2. வானங்களே, கேளுங்கள்; பூமியே, செவிகொடு; கர்த்தர் பேசுகிறார்; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன்; அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்கள்.
3. மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும் என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார்.
4. ஐயோ, பாவமுள்ள ஜாதியும் அக்கிரமத்தால் பாரஞ்சுமந்த ஜனமும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள்; கர்த்தரை விட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள்.
5. இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகமாய் விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது.
6. உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமில்லை; அது காயமும் வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது.
7. உங்கள் தேசம் பாழாயிருக்கிறது; உங்கள் பட்டணங்கள் அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது; உங்கள் நாட்டை அந்நியர் உங்கள் கண்களுக்கு முன்பாகப் பட்சிக்கிறார்கள்; அது அந்நியரால் கவிழ்க்கப்பட்ட பாழ்ந்தேசம் போல் இருக்கிறது.
8. சீயோன் குமாரத்தி திராட்சத்தோட்டத்தில் உள்ள ஒரு குச்சுபோலவும் வெள்ளரித்தோட்டத்திலுள்ள ஒரு குடிசைபோலவும், முற்றிக்கை போடப்பட்ட ஒரு பட்டணம் போலவும் மீந்திருக்கிறாள்.
9. சேனைகளின் கர்த்தர் நமக்குக் கொஞ்சம் மீதியை வைக்காதிருந்தாரானால், நாம் சோதோமைப்போலாகி, கொமோராவுக்கு ஒத்திருப்போம்.
10. சோதோமின் அதிபதிகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் ஜனமே, நமது தேவனுடைய வேதத்துக்குச் செவிகொடுங்கள்.
11. உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களின் இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை.
12. நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்?
13. இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வுநாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச் சகிக்கமாட்டேன்.
14. உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன்.
15. நீங்கள் உங்கள் கைகளைவிரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.
16. உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்;
17. நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப் பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்.
18. வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.
19. நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால் தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்.
20. மாட்டோம் என்று எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று.
21. உண்மையுள்ள நகரம் எப்படி வேசியாய்ப்போயிற்று! அது நியாயத்தால் நிறைந்திருந்தது, நீதி அதில் குடிகொண்டிருந்தது; இப்பொழுதோ அதின் குடிகள் கொலைபாதகர்.
22. உன் வெள்ளி களிம்பாயிற்று; உன் திராட்சரசம் தண்ணீர்கலப்பானது.
23. உன் பிரபுக்கள் முரடரும் திருடரின் தோழருமாயிருக்கிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனும் பரிதானத்தை விரும்பி, கைக்கூலியை நாடித்திரிகிறான்; திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரியார்கள்; விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை.
24. ஆகையால் சேனையின் கர்த்தரும் இஸ்ரவேலின் வல்லவருமாகிய ஆண்டவர் சொல்லுகிறதாவது: ஓகோ நான் என் சத்துருக்களில் கோபம் ஆறி, என் பகைஞருக்கு நீதியைச் சரிக்கட்டுவேன்.
25. நான் என் கையை உன்னிடமாய்த் திருப்பி, உன் களிம்பு நீங்க உன்னைச் சுத்தமாய்ப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன்.
26. உன் நியாயாதிபதிகளை முன்னிருந்ததுபோலவும் உன் ஆலோசனைக்காரரை ஆதியில் இருந்ததுபோலவும் திரும்பக்கட்டளையிடுவேன்; பின்பு நீ நீதிபுரம் என்றும், சத்தியநகரம் என்றும் பெயர் பெறுவாய்.
27. சீயோன் நியாயத்தினாலும், அதிலே திரும்பி வருகிறவர்கள் நீதியினாலும் மீட்கப்படுவார்கள்.
28. துரோகிகளும் பாவிகளுமோ ஏகமாய் நொறுங்குண்டு போவார்கள்; கர்த்தரைவிட்டு விலகுகிறவர்கள் நிர்மூலமாவார்கள்.
29. நீங்கள் விரும்பின கர்வாலிமரங்களினிமித்தம் வெட்கப்படுவீர்கள்; நீங்கள் தெரிந்துகொண்ட தோப்புகளினிமித்தம் நாணமடைவீர்கள்.
30. இலையுதிர்ந்த கர்வாலிமரத்தைப்போலவும், தண்ணீரில்லாத தோப்பைப் போலவும் இருப்பீர்கள்.
31. பராக்கிரமசாலி சணற்கூளமும், அவன் கிரியை அக்கினிப்பொறியுமாகி, இரண்டும் அவிப்பாரில்லாமல் ஏகமாய் வெந்துபோம் என்று சொல்லுகிறார்.
Isaiah-1 – esaya-1
1. aamoosin kumaranakiya esaya, yoothavin rajakkalakiya usiya, yootham, aakas, esekkiya enpavarkalin natkalil, yoothavaiyum erusalemaiyum kuriththuk kanta tharisanam.
2. vanangkale, kelungkal; poomiye, sevikotu; karththar pesukirar; nan pillaikalai valarththu aathariththen; avarkaloo enakku viroothamayk kalakampanninarkal.
3. matu than ejamanaiyum, kazhuthai than aantavanin munnanaiyaiyum ariyum; israveloo arivillamalum en janam unarvillamalum irukkirathu enkirar.
4. aiyoo, pavamulla jathiyum akkiramaththal paranysumantha janamum, pollathavarkalin santhathiyum, ketu untakkukira puththirarumayirukkirarkal; karththarai vittu, isravelin parisuththarukkuk koopamuntakki, pinvangkippoonarkal.
5. innum neengkal en atikkappataventum? athikamay vilakippookireerkale; thalaiyellam viyathiyum, iruthayamellam palatsayamumay irukkirathu.
6. ullangkal thotangki ussanthalaimattum athile sukamillai; athu kayamum veekkamum, nothikkira iranamumullathu; athu seezh pithukkappatamalum, kattappatamalum, enneyinal aarrappatamalum irukkirathu.
7. ungkal thesam pazhayirukkirathu; ungkal pattanangkal akkiniyinal sutterikkappattathu; ungkal nattai anniyar ungkal kankalukku munpakap patsikkirarkal; athu anniyaral kavizhkkappatta pazhnthesam pool irukkirathu.
8. seeyoon kumaraththi thiratsaththoottaththil ulla oru kussupoolavum vellariththoottaththilulla oru kutisaipoolavum, murrikkai pootappatta oru pattanam poolavum meenthirukkiral.
9. senaikalin karththar namakkuk konysam meethiyai vaikkathiruntharanal, nam soothoomaippoolaki, komooravukku oththiruppoom.
10. soothoomin athipathikale, karththarutaiya varththaiyaik kelungkal; komooravin janame, namathu thevanutaiya vethaththukkus sevikotungkal.
11. ungkal palikalin thiral enakku ennaththukku enru karththar sollukirar; aattukkatakkalin thakanapalikalum, kozhuththa mirukangkalin ninamum enakku aroosikamayirukkirathu; kalaikal, aattukkuttikal, katakkalin iraththaththinmel enakkup piriyamillai.
12. neengkal en sannithiyil varumpoothu, en pirakarangkalai ippati mithikkaventumenru ungkalitaththil kettathu yar?
13. ini veen kanikkaikalaik kontuvaraventam; thoopangkattuthal enakku aruvaruppayirukkirathu; neengkal akkiramaththoote aasarikkira mathappirappaiyum, ooyvunalaiyum, sapaikkoottaththaiyum nan inis sakikkamatten.
14. ungkal mathappirappukalaiyum, ungkal pantikaikalaiyum en aaththuma verukkirathu; avaikal enakku varuththamayirukkirathu; avaikalais sumanthu ilaiththuppoonen.
15. neengkal ungkal kaikalaiviriththalum, en kankalai ungkalaivittu maraikkiren; neengkal mikuthiyay jepampanninalum kelen; ungkal kaikal iraththaththinal nirainthirukkirathu.
16. ungkalaik kazhuvis suththikariyungkal; ungkal kiriyaikalin pollappai en kankalukku maraivaka akarrivittu, theemaiseythalai vittu ooyungkal;
17. nanmaiseyyap patiyungkal; niyayaththaith thetungkal; otukkappattavanai aathariththu, thikkarrap pillaiyin niyayaththaiyum, vithavaiyin vazhakkaiyum visariyungkal.
18. vazhakkatuvoom varungkal enru karththar sollukirar; ungkal pavangkal siverenrirunthalum uraintha mazhaiyaip pool venmaiyakum; avaikal iraththamparas sivappayirunthalum panysaippoolakum.
19. neengkal manamporunthis sevikotuththal thesaththin nanmaiyaip pusippeerkal.
20. mattoom enru ethirththunirpeerkalakil pattayaththukku iraiyaveerkal; karththarin vay ithais sollirru.
21. unmaiyulla nakaram eppati vesiyayppooyirru! athu niyayaththal nirainthirunthathu, neethi athil kutikontirunthathu; ippozhuthoo athin kutikal kolaipathakar.
22. un velli kalimpayirru; un thiratsarasam thanneerkalappanathu.
23. un pirapukkal muratarum thirutarin thoozharumayirukkirarkal; avarkalil ovvoruvanum parithanaththai virumpi, kaikkooliyai natiththirikiran; thikkarra pillaiyin niyayaththai visariyarkal; vithavaiyin vazhakku avarkalitaththil erukirathillai.
24. aakaiyal senaiyin karththarum isravelin vallavarumakiya aantavar sollukirathavathu: ookoo nan en saththurukkalil koopam aari, en pakainyarukku neethiyais sarikkattuven.
25. nan en kaiyai unnitamayth thiruppi, un kalimpu neengka unnais suththamayp putamittu, un eeyaththaiyellam neekkuven.
26. un niyayathipathikalai munnirunthathupoolavum un aaloosanaikkararai aathiyil irunthathupoolavum thirumpakkattalaiyituven; pinpu nee neethipuram enrum, saththiyanakaram enrum peyar peruvay.
27. seeyoon niyayaththinalum, athile thirumpi varukiravarkal neethiyinalum meetkappatuvarkal.
28. thurookikalum pavikalumoo ekamay norungkuntu poovarkal; karththaraivittu vilakukiravarkal nirmoolamavarkal.
29. neengkal virumpina karvalimarangkalinimiththam vetkappatuveerkal; neengkal therinthukonta thooppukalinimiththam nanamataiveerkal.
30. ilaiyuthirntha karvalimaraththaippoolavum, thanneerillatha thooppaip poolavum iruppeerkal.
31. parakkiramasali sanarkoolamum, avan kiriyai akkinipporiyumaki, irantum avipparillamal ekamay venthupoom enru sollukirar.