Iruthi Rapojana Virunthilae song lyrics

இறுதி ராப்போஜன விருந்திலே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இறுதி ராப்போஜன விருந்திலே
இரட்சகர் விற்றிருந்தார்
இயேசு பன்னிரு சீஷருடன்
அப்பமதை எடுத்தவர்
ஆசீர்வதித்ததை பிட்டுத் தந்தார்
எந்தன் சரீரம் இதுவே புசிப்பீர்
என்றே பரிமாறினார்
பாத்திரத்தில் நவரசம்
பாவத்தைக் கழுவிடும் தூய இரத்தம்
இரட்சண்ய புது உடன்படிக்கையே
இதைப் பானம் பண்ணும் என்றார்
அன்பின் சீஷன் ஆறுதலாய்
அண்ணலின் மார்பினில் சாய்ந்திருந்தான்
துரோகியாம் யூதாஸ் துணிக்கையும்
வாங்கி தீவிரம் போய் மறைந்தான்
கபடற்ற மனதுடன் கிறிஸ்துவின்
மன்னிக்கும் சிந்தையுடன்
சந்தோஷமாக சமாதானமாக
பந்தியில் பங்கடைவோம்
5.பக்தரோடே சீயோனிலும்
பிதாவின் ராஜ்ஜிய பந்தியிலும்
வாஞ்சையாய் நாமும் வருகையில்
சென்று விரைந்து சேர்ந்து கொள்வோம்