iruppathellam tharukinren

இருப்பதெல்லாம் தருகின்றேன்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

இருப்பதெல்லாம் தருகின்றேன்
இறைவா ஏற்றிடுவாய்
அர்ப்பணமாய் உமக்காக
என்னையே தருகின்றேன்
அயலாரை அன்பு செய்யும் உள்ளம்
அதை என்னிடம் தருவாய் இறைவா
உறவோடு நான் தரும் காணிக்கை
அதை உரிமையில் ஏற்பாய் இறைவா
வியத்தகு அன்பை எமக்காய்
அதை வியந்தே கொடுத்திடு இறைவா
நீ தரும் அன்பை பிறரில்
நான் பகிர்வேன் மகிழ்வேன் இறைவா
விடியும் பொழுதுகள் எல்லாம்
நான் உமக்காய் தருவேன் இறைவா
விழிகள் காண்பது எல்லாம்
நான் உவந்தே அளிப்பேன் இறைவா
வாழ்கின்ற ஒவ்வொரு நொடியும்
உம் தாய் மடி சுகமென அமர்வேன்
என்னையே காணிக்கை பொருளாய்
உம் பலிதனில் நிறைவாய் ஏற்பாய்
இருப்பதெல்லாம் தருகின்றேன் பாடல் வரிகள், Iruppathellaam Tharukintrean lyrics