irulil irunthu meettita

எல்-யெஷூவா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

இருளில் இருந்து மீட்டிட
இம்மானுவேல் பொறந்தாரு
பாவி என்ன மீட்டிட
எல் யெஷூவா உதிச்சாரு
இருளில் இருந்து மீட்டிட
இம்மானுவேல் பொறந்தாரு
பாவி என்ன மீட்டிட
எல் யெஷூவா உதிச்சாரு
இயேசுவின் அன்பு வந்தாச்சி உள்ள
வேற ஒண்ணும் எனக்கு தேவ இல்ல
இயேசுவின் அன்பு வந்தாச்சி உள்ள
வேற ஒண்ணும் எனக்கு தேவ இல்ல
இனி அழுக இல்ல ஆனந்தம்
குமுறல் இல்ல கும்மாளம்
உனக்காக பொறந்தாரு கொண்டாட்டமே ஹே…
அழுக இல்ல ஆனந்தம்
குமுறல் இல்ல கும்மாளம்
நமக்காக பொறந்தாரு கொண்டாட்டமே
Verse-1:
அவர் தாழ்மைய தான் பாருங்கம்மா
ஏழ்மையின் ரூபமா வந்தாரம்மா
அவர் தாழ்மைய தான் பாருங்கய்யா
ஏழ்மையின் ரூபமா வந்தாரய்யா
இணையில்லா பாசம் எக்ஸ்ட்ரீமான நேசம்
உம் பண்ப விளக்க அன்ப அளக்க போதாது ஆகாசம்
இணையில்லா பாசம் ஈடாகாத நேசம்
உம் பண்பினை விளக்க அன்பினை அளக்க போதாது ஆகாசம்
இயேசுவின் அன்பு வந்தாச்சி உள்ள
வேற ஒண்ணும் எனக்கு தேவ இல்ல
இயேசுவின் அன்பு வந்தாச்சி உள்ள
வேற ஒண்ணும் எனக்கு தேவ இல்ல
இனி அழுக இல்ல ஆனந்தம்
குமுறல் இல்ல கும்மாளம்
உனக்காக பொறந்தாரு கொண்டாட்டமே ஹே…
அழுக இல்ல ஆனந்தம்
குமுறல் இல்ல கும்மாளம்
நமக்காக பொறந்தாரு கொண்டாட்டமே
சத்தானையே பட்சிக்க நம்மல ரட்சிக்க
சத்தானையே பட்சிக்க நம்மல ரட்சிக்க
உள்ளத்த தேற்றி பிள்ளையா மாற்றி அப்பானு மெச்சிக்க
உள்ளத்த தேற்றி பிள்ளையா மாற்றி அப்பானு மெச்சிக்க
ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ஆராரோ…
ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ஆராரோ…
Verse-2:
உயிரானாரே என் உலகானாரே
உள்ளத்துல குடியிருக்கும் உறவானாரே
உயிரானாரே என் உலகானாரே
உள்ளத்துல குடியிருக்கும் உறவானாரே
தாவீதின் வம்சம் யூத ராஜ சிங்கம்
பூவில் வந்து ஜீவன் தந்து சாவை வென்ற தெய்வம்
தாவீதின் வம்சம் யூத ராஜ சிங்கம்
பூவில் வந்து ஜீவன் தந்து சாவை வென்ற தெய்வம்
இயேசுவின் அன்பு வந்தாச்சி உள்ள
வேற ஒண்ணும் எனக்கு தேவ இல்ல
இயேசுவின் அன்பு வந்தாச்சி உள்ள
வேற ஒண்ணும் எனக்கு தேவ இல்ல
இனி அழுக இல்ல ஆனந்தம்
குமுறல் இல்ல கும்மாளம்
உனக்காக பொறந்தாரு கொண்டாட்டமே ஹே…
அழுக இல்ல ஆனந்தம்
குமுறல் இல்ல கும்மாளம்
நமக்காக பொறந்தாரு கொண்டாட்டமே…