iratsippil atangkiyiruppavaikal – Ratchipil Adangiyiruppavaigal

இரட்சிப்பில் அடங்கியிருப்பவைகள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இரட்சிப்பில் அடங்கியிருப்பவைகள் – Ratchipil Adangiyiruppavaigal
which are included in salvation
மனந்திரும்புதல்
மனந்திரும்புதல் வெறும் வருத்தப்படுவதல்ல; மனமாற்றத்தோடு வருத்தப்படுவதாகும். பாவத்திலிருந்து விடை பெற்று தேவனிடத்திற்கு திரும்புவதாகும். ஒரு மனமாற்றம் தான்தேவைப்படுகிறது. மதமாற்றமோ, சபை மாற்றமோ அல்ல. ‘அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்ப வேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.’ (அப். 17:30). தேவனிடம் மனந்திரும்புவதும், கிறிஸ்து இயேசுவில் விசுவாசிப்பதும் (அப்.6 :20 :21) இரட்சிப்புக்குத் தேவைப்படுகிறது. பாவ அறிக்கையும், பாவ வெறுப்பும் மனந்திரும்புதலில் அடங்கியிருக்கிறது. யூதாஸ்காரியோத் அறிக்கை செய்தான். ஆனால் மனந்திரும்பவில்லை. ஆனால் பேதுரு அறிக்கை செய்து மனந்திரும்பினான். ஒருவன் பாவத்தைக் குறித்து உணர்த்தப்படும்போது, மனந்திரும்புதல் ஏற்படும். சிறை அதிகாரி பவுலிடம் கேட்டார்: ‘நான் இரட்சிக்கப்பட என்ன செய்யவேண்டும் ?’ பவுலின் பதில், ‘கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி’ என்பதாகும் (அப். 16:30,31). பவுல் மனந்திரும்புதலைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை. ஏனென்றால் அவனுடைய கேள்வியே மனந்திரும்புதலின் ஒரு விளைவாகத் தான் இருந்தது.
பாவத்திலிருந்து விடுதலை
நாம் இரட்சிக்கப்படும்போது நாம் உணரும் முதல் காரியம் நம் பாவங்களிலிருந்து விடுதலை பெற்றதின் சந்தோஷமாகும். பாவிகளாக நாம் தண்டனைக்கு விதிக்கப்பட்டவர்கள் என்று பரிசுத்த ஆவியானவர் நம்மை உணர்த்துகிறார். ஆனால் கிறிஸ்துவின் மேலுள்ள நம் விசுவாசத்தின் மூலம் நாம் பாவத் தண்டனையிலிருந்து மன்னிப்படைகிறோம் என்பது தான் பாவத்திலிருந்து விடுதலை பெறுவதின் அர்த்தமாக இருக்கிறது. லூக்கா 7:48-ல் நம் கர்த்தராகிய இயேசு பாவியான ஸ்திரீயிடம் சொன்னார். “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன.” இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது (எபே. 1:7). ஒரு பாவி கிறிஸ்துவில் விசுவாசிக்கும்போது, அவனுடைய எல்லா பாவங்களிலிருந்தும் அவனுக்கு மன்னிப்பு அருளப்படுகிறது. ‘அவரை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் அவருடைய நாமத்தினாலே பாவ மன்னிப்பைப் பெறுகிறான்.’ (அப். 10:43). I
நீதிகரிப்பு (நீதிமானாக்கப்படுதல்)
நியாயப்படுத்தல் ஒரு மனிதனை நீதிமானாக்குவதில்லை; இது ஒரு மனிதன் மாசற்றவன் மற்றும் குற்றமற்றவன் என்று அறிக்கை செய்கிறது. தண்டனைக்கான ஒரு தீர்ப்பை இது மாற்றிப் போடுகிறது. தேவன்தெரிந்து கொண்டவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார் ? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர் (ரோமர் 8:33). சுருக்கமாக நீதிகரிப்பு என்பது ஒரு மேல் அதிகாரி ஒரு தண்டனையின் தீர்ப்பை ரத்து செய்வதாகும்.
யார் நீதிமானாக்கப்படுகிறான் ? ரோமர் புத்தகத்தில் பவுல் சொல்கிறார் : பாவியை நீதிமானாக்குகிற தேவனிடத்தில் ஒருவன் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும் (ரோமர் 4:5). லூக்கா 18:10-14ல் கர்த்தர், வரிவசூல் செய்கிறவன் மற்றும் பரிசேயன் உவமை மூலம் இதை விளக்குகிறார். பரிசேயன், தான் நீதிமான் என்று நிரூபிக்க முயற்சிக்கிறான். வரிவசூல் செய்கிறவன், பாவத்தின் சுமையினால் தன் மார்பை அடித்துக் கொண்டு சொல்கிறான்: ‘தேவனே பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்.’ இவன் தான் தேவனுக்கு முன்பாக நீதிமானாக வீட்டிற்குச் சென்றான். நீதிமானாக்கப்படுதல், மன்னிப்பை விட ஒரு படி மேலானது. இது ஒரு பாவி கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும்போது, ஒரு பாவமில்லாத மனிதனாக ஏற்றுக் கொள்ளும் தேவனுடைய செயலாகும்.
Christmas Bible Verses and Their Significance
Psalm 91 – A Source of Strength and Comfort | Deeply Moving Bible Verses for Reflection
Come for All Things Are Now Ready: A Biblical Invitation to Abundance
Motivational Bible Verses for Inspired Living
Come For All Things Are Now Ready