irakkaththaiyum neethiyaiyum kuriththup patuven;

இரக்கத்தையும் நீதியையும்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இரக்கத்தையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்;
ஆண்டவரே, உமக்கே புகழ் சாற்றிடுவேன்.
மாசற்று நடப்பதில் நான் கருத்தாயுள்ளேன்
எப்பொழுது என்னிடம் நீர் வருவீர்?
மாசற்று நடப்பதில் நான் கருத்தாயுள்ளேன்
எப்பொழுது என்னிடம் நீர் வருவீர்?
தூய உள்ளத்தோடு என் இல்லம் வாழ்வேன். – 2
இழிவான எதையும் நான் வைக்கமாட்டேன். = 2
நெறியற்ற செயலை நான் வெறுக்கின்றேன்;
அது என்னை ஒருபோதும் பற்றிக்கொள்ளாது.
நெறியற்றவர் செயலை நான் வெறுக்கின்றேன்;
அது என்னை ஒருபோதும் பற்றிக்கொள்ளாது
வஞ்சக நெஞ்சம் எனக்கு வெகு தொலைவில் -2
தீதான எதையும் நான் அறியேன். – 2
இறுமாப்புச் செருக்கைப் பொறுத்துக் கொள்ளேன்
நம்பிக்கைக்குரியோரைக் கண்டுபிடிப்பேன்
இறுமாப்புச் செருக்கைப் பொறுத்துக் கொள்ளேன்
நம்பிக்கைக்குரியோரைக் கண்டுபிடிப்பேன்
நேர்மையானவர்களே என் பணியாளர் -2
அவரை என்னோடு வாழச் செய்வேன்; -2
வஞ்சகர்க்கு ஒருபோதும் வாழ்வு கொடேன்
வாய்மையற்றோருக்கு என் வாசல் இல்லை
வஞ்சகர்க்கு ஒருபோதும் வாழ்வு கொடேன்
வாய்மையற்றோருக்கு என் வாசல் இல்லை
புறங்கூறி திரிவோரைப் புறந்தள்ளுவேன் -2
பொல்லாதவர்களை தினம் அழிப்பேன்-2
இறைவா இறைவா என் தலைவா