1.irakkamulla yesuve

இரக்கமுள்ள யேசுவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.இரக்கமுள்ள யேசுவே,
நரரின் தன்மையாகவே
பிறந்ததால் துதிக்கிறோம்
சுரரும் பாடக் கேட்கிறோம்.
2.அளவில்லாத வல்லவர்,
அனைத்தையும் படைத்தவர்
மதலையாய்ப் பிறந்தனர்,
மனுஷர்போல வளர்ந்தனர்.
3.அநாதி ஜோதி பூமிக்கு
வெளிச்சம் தோன்ற மாந்தர்க்கு
மெய்ச்சுடலாய் இருட்டிலே
பிரகாசமாய் உதித்ததே;
4. அதைக் கருத்தாய் சிந்தித்து,
பூலோகத்தாரே பூரித்து,
அவ்வொளி நோக்கிப் பாருங்கள்,
அதில் நடக்க வாருங்கள்.