iraivanin anpu uravithu – Iraivanain Anbu Uravithu

இறைவனின் அன்பு உறவிது

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs and Roman Catholic Songs collection.

இறைவனின் அன்பு உறவிது – Iraivanain Anbu Uravithu
இறைவனின் அன்பு உறவிது – அவர்
நினைவாய் செய்திடும் பலியிது
இறையில் இணைய அன்பில் நனைய
மகிழ்வாய் நாமும் கலந்திடுவோம்
பணிவுடன் வாழ்ந்திட அழைக்கிறார் – இயேசு
பாதங்கள் கழுவியே காட்டினார்
அன்புடன் நட்புடன் பழகினார் – அந்த
அன்பையே பகிர்ந்திட சொல்கிறார்
அவர் அன்பு பெரியது
அவர் அன்பு உயர்ந்தது
அவரின் சாட்சியாய் உறவினில் வாழ்ந்திட
அன்பில் மகிழும் நேரம் இது – அவர் அன்பில் மகிழும் நேரமிது
நானே உயிர் தரும் உணவென்றார் – இயேசு
தன்னையே விருந்தாய் தருகின்றார்
நானே உலகின் ஒளி என்றார் – நம்
வாழ்வின் மீட்பராய் திகழ்கின்றார்
அவர் அன்பு பெரியது
அவர் அன்பு உயர்ந்தது
அவரின் சாட்சியாய் உறவினில் வாழ்ந்திட
அன்பில் மகிழும் நேரம் இது – அவர் அன்பில் மகிழும் நேரமிது