iraivanin aatsiyai ithayaththil – Iraivanin Aatchiyai Idhayaththil

இறைவனின் ஆட்சியை இதயத்தில்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

இறைவனின் ஆட்சியை இதயத்தில் – Iraivanin Aatchiyai Idhayaththil
ஆ…. ஆ…
இறைவனின் ஆட்சியை இதயத்தில் ஏற்ற
( இறைகுலமே வருக ) – 4 – (2)
இறையன்பில் திளைத்து பிறரன்பில் உழைக்க
( இழந்திடவே எழுக ) – 2
ஆ…… ஆ…. ல…. ல…. லா…. லா….
1. அன்பினில் நிலைப்பதும் அறப்பணி புரிவதும்
அன்பர் நம் சிறப்பாகும்
அடுத்தவர் நலனிலும் அகிலத்து உயிரிலும்
அக்கறைநம் பொறுப்பாகும்
இதனையே உணர்த்திடும் இறைபலியில்
இதயத்தால் பங்கேற்று பலியாவோம்
இனி நம் வாழ்வால் திருப்பலியாவோம் (இறையன்பில்)
ல ல லா…. ல ல லா….. ம்… ம்…
2. உண்மையில் உழல்வதும் உணர்வுடன் உழைப்பதும்
உயர்நெறி வழியாகும்
உரிமைகள் காப்பதும் உவப்புடன் பகிர்வதும்
உலகிற்கு ஒளியாகும்
இரக்கத்தின் செயலெலாம் இறைபலியாம்
இணைந்த நற்பணியெலாம் திருப்பலியாம்
இனி நம் வாழ்வால் புதுப்பலியாவோம் (இறையன்பில்)