iraiva unthan patham varukinren – Iraiva unthan paatham varukintran

இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இறைவா உந்தன் பாதம் வருகின்றேன் – Iraiva unthan paatham varukintran
பாடல் வரிகள் – காணிக்கை பாடல்
இறைவா.. உந்தன் பாதம் வருகின்றேன்
என்னையே.. உனக்காக தருகின்றேன் – 2
மலர்களில் விழுந்து மணமென நுழைந்து
காற்றினில் கலந்து கனிவோடு பணிந்து (இறைவா)
1. பசி உள்ளோர்க்கு உணவாக நானிருப்பேன்
உடை இல்லாத எளியோர்க்கு உடை அளிப்பேன் – 2
விழுந்தவரை தூக்கிடுவேன்
இங்கு நலிந்தவரின் துணையிருப்பேன்
இதுவே நான் தரும் காணிக்கையே
2. இருப்பவர் கொடுப்பதில் இன்பம் என்ன
கையில் இருப்பதை கொடுப்பதே இன்பம் என்றாய் – 2
பலியை அல்ல இரக்கத்தையே
என்னில் விரும்புகின்ற இறைமகனே
உன்னைபோல் நானும் உருவாகிட