iraiva nee va en uyire

இறைவா நீ வா என் உயிரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

இறைவா நீ வா என் உயிரே
உணவாய் வந்தாய் என் உறவே
உனதாய் எனை மாற்றவே உடைந்தாய் எனக்காகவே
நிலையாய் என் வாழ்விலே நிஜமாய் வந்தாய் நீயே
எனக்கெல்லாமும் நீ… என் வாழ்வில்… (இறைவா)
சரணம் – 1
வானின்று இறங்கி வந்த
உயிருள்ள உணவு நானே
என்னை என்றும் உண்போர்க்கெல்லாம்
பசியும் தாகம் இருக்காது
உம் வாழ்வின் இறப்பிலும் உயிர்ப்பிலும்
சங்கமிக்க வேண்டுமென்றே
நற்கருணை நாதரே எந்தன் இதயம் நாடுதே…
தெய்வீக உணவான அன்பே
தெவிட்டாத அமுதான அருளே
என் நினைவாய் செய்யும் என்றாய் ஓ..ஓ.. (இறைவா )
சரணம் – 2
இதோ உந்தன் உடலும் இரத்தமும்
உம்மோடு இணைக்கும் மருந்தே
ஆன்மாவின் ஆனந்த தேடலே
அன்பின் தியாக விருந்திதுவே
ஏற்ற தாழ்வு அகற்றும் உணவே
வேற்றுமை களையும் உணவே
எல்லோரும் ஒன்றாய் இருக்க
ஆசைக் கொண்ட இறைமகனே
பணிசெய்ய பலமாக இருந்தாய்
உந்தன் உருவாய் எனை மாற்ற வந்தாய்
என் நினைவாய் செய்யும் என்றாய் ஓ..ஓ.. (இறைவா )