iraiva ithoo varukinroom – Iraiva Idho Varugindrom

இறைவா இதோ வருகின்றோம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

இறைவா இதோ வருகின்றோம் – Iraiva Idho Varugindrom
இறைவா இதோ வருகின்றோம்
உம்திரு உள்ளம் நிறைவேற்ற
கல்லான இதயத்தை எடுத்துவிடு
எமைக் கனிவுள்ள நெஞ்சுடனே வாழ விடு
எம்மையே நாங்கள் மறக்க விடு
கொஞ்சம் ஏனையோர் துன்பம் நினைக்கவிடு
பலியென உணவை தருகின்றோம்
நிதம் பசித்தோர்க்கு உணவிட மறக்கின்றோம்
கடமை முடிந்ததென நினைக்கின்றோம்
எங்கள் கண்களை கொஞ்சம் திறந்து விடு
துளிர்க்கும் விழிநீர் கொணர்கின்றோம்
அதைத் துடைப்பாய் என உனைக் கேட்கின்றோம்
வறியவர் கண்களில் வடிநீரை இன்று
மறந்தோம் எம்மை மாற்றிடுவாய்