irainatha en iyesu natha

இறைநாதா என் இயேசு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

இறைநாதா என் இயேசு நாதா
இரக்கம் நிறைந்தவா பேரன்பு மிக்கவா
வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைப்போல
வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைப்போல
உள்ளத்தில் அன்பற்று வேடமிட்டேனே
உள்ளத்தில் அன்பற்று வாழ்ந்து வந்தேனே
வள்ளலே நீர்தாமே, …… ஆ ஆ ஆ
வள்ளலே நீர்தாமே, உன்மத்தன் என்னைத்
தள்ளாமல் தினமும் தாங்கியருளும்
இறுகிய உள்ளம் இறைவனை மறக்கும்
இறுகிய உள்ளம் நீதியைக் கொல்லும்
நொறுங்கிய நெஞ்சம் நாதனை நாடும்
நொறுங்கிய நெஞ்சம் உதவிக்கு ஏங்கும்
பெருஞ்சுமை சுமந்து ஆ ஆ ஆ
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்போரே
இறைவன் இயேசு தருவார் ஆறுதல்
தீய என் நெஞ்சை அனலே அகற்றும்
தீய என் நெஞ்சை அனலே அகற்றும்
தூய ஆவியே என்னிலே தங்கும்
தூய ஆவியே என்னிலே தங்கும்
நேயனே நீர்தான் ஆ ஆ ஆ–
நேயனே நீர்தான், பாவிகள் நேசனே – நல்
ஆயனே நாடும் என்னையும் ஏற்றருளும்