1. inthak kataisi kalaththile ekkalam thonikkaiyil

இந்தக் கடைசி காலத்திலே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1. இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்
இயேசு விண்ணகத்தில் தோன்றிடுவார்
ஒளிமயமான அந்த மோட்சத்தின் கரையண்டை
மீட்கப்பட்ட தாசர் வந்து சேருவர்.
தாசர் விண்ணில் ஒன்று கூடி (3)
நிற்கும் போது, நானும் கூடவே நிற்பேன்.
2. கிறிஸ்துவுக்குள் மரித்தோர் யாவரும் உயிர்த்தெழுந்து
மேக மண்டலத்தைத் தாண்டிச் செல்லுவர்
தங்களுக்காயத்தம் செய்யப்பட்ட அந்த நகர்க்கே
மிக ஆனந்தமாய் வந்து சேருவர்.
3. முழு மனதாய் நான் கிறிஸ்துவுக்கு அர்ப்பணம் செய்து
அவர் அன்பின் செயலை அறிவிப்பேன்
பணியை இப்பூதலத்தில் நிறைவேற்றி முடித்து
நானும் மீட்பரண்டை வந்து சேருவேன்.
இந்தக் கடைசி காலத்திலே பாடல் வரிகள், Intha Kadaisi Kaalathilae Lyrics