Intha Vealai Vanthu Varam

இந்த வேளை வந்து வரம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Salvation Army Songs collection.

பல்லவி
இந்த வேளை வந்து வரம் தந்தாள் ஐயனே!
1. தேவாதி தேவனே! திரு மனுவேலனே! தேவா!
சிறியேனைக் கண்பாராய் நின் தீன தயை கூராய்!
ஜெயசீலா தேவபாலா மனுவேலா வரம்தா! – இந்த
2. எத்தனையோ தரம் ஏழை நான் செய்த பாவம் – தேவா
அத்தனையும் நீக்கி அடியேனைக் கைதூக்கி – எனை
ஆள கிருபை சூழ நல்லவேளை வந்ததே! – இந்த
3. பாவிகளை ரட்சிக்க பாருல குதித்தவா – ஏழைப்
பாவியெனை யன்பாய் படிதனில் நற்பண்பாய் – உனைப்
பாட நிதந்தேட பாதையோட கிருபைசெய் – இந்த
4. இரட்சண்ய சேனையார் செய் எத்தொழிலானாலும் – நின்
சிகரமே விளங்க! திருமறை துலங்க, ஜெக
தீசா பாவநாசா உனின் தாசர்க் கருள் தா! – இந்த
இந்த வேளை வந்து வரம் பாடல் வரிகள், Intha Vealai Vanthu Varam Lyrics