intha ulakaththil thuyarangkal theerathu

இந்த உலகத்தில் துயரங்கள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இந்த உலகத்தில் துயரங்கள் தீராது
நாம் பரலோகம் செல்லும்
நாள் வரும் வரையில்
விசுவாச ஜனத்தார் பறந்திடுவார்
வேகம் வந்திடும் நேசரின் முகம் காண
வான சேனையுமாய் வரும்
நேசர் வானமேகத்தில் வந்திடுவார்
வரவேற்க சபையோரே காத்திருங்கள்
எந்தன் பரலோக மணவாளனை சந்திக்க
அவர்தம் ஜனங்களும் அவருடன் இருக்க
கண்ணீரைத் துடைக்கும் நாள் இதுவல்லோ
மரணமும் துக்கமும் புலம்பலும் இல்லை
கஷ்டங்களை அவரே தீர்த்திடுவார் – வான
கொடுங்காற்று வந்து கடும் அலை
என்மேல் மோதினாலும்
கடல் அலையில்
என்னை கைவிடாதவர்
அவர்தம் கரம் கொடுக்க காத்திருங்கள்
நம் கைவிடாத நேசர்மேல் நம்பிக்கையோடு
உம் கிருபை என்றும் நான் பாடிடுவேன்
உம் ஜொலிக்கும் முகம் நோக்கி பார்த்திடுவேன்
பெற்ற தாய் தன் பிள்ளைகளை மறந்தாலும்
என்னை மறவாதவர் என்றும் மாறாதவர் – வான