Intha Nalil Umathu kirubai vendumae lyrics

இந்த நாளில் உமது கிருபை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இந்த நாளில் உமது கிருபை வேண்டுமே
உம் கிருபையால் நானும் வாழ வேண்டுமே
1.எத்தனையோ சோதனைகள் என் வாழ்வில்
அனுதினமும் எனை சூழ வந்தாலும்
அத்தனையும் மேற்கொள்ள உம் கிருபை
போதுமே போதுமே அனுதினமும்-இந்த நாளில்
2.பரிசுத்தமாய் வாழ்ந்திடவே உம் கிருபை
அனுதினமும் தேவை அது என் வாழ்வில்
வெற்றியுள்ள வாழ்வு வாழ உம் கிருபை
போதுமே போதுமே அனுதினமும்-இந்த நாளில்
3.உம் இருதயத்திற்கேற்ற வாழ்வு வாழவே
அனுதினமும் உம் கிருபை தேவையே உம்
சித்தப்படி வாழவைக்கும் உம் கிருபை
போதுமே போதுமே அனுதினமும்-இந்த நாளில்
4.கர்த்தர் எந்தன் மேய்ப்பராக என் வாழ்வில்
அனுதினமும் கரம்பிடித்து நடத்துகிறிர்
குறைவில்லாமல் நடத்திடவே உம் கிருபை
போதுமே போதுமே அனுதினமும்-இந்த நாளில்