intha aantin nanmai yaavum

இந்த ஆண்டின் நன்மை யாவும்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.

இந்த ஆண்டின் நன்மை யாவும்
உந்தன் வாழ்வில் பலிக்குமே
இதயம் நிறைந்து துதித்திடுவோம்
இயேசு ராஜனையே
நல்லவர் இயேசு நல்லவர்
அவர் மாட்சிமை உள்ளவரே
1. பொல்லாப்பும் வாதையும் அணுகிடாதே
கரங்களினால் நம்மைத் தாங்கிடுவாரே
செட்டையின் மறைவில் மறைத்து கொள்வார்
அடைக்கலம் புகுந்திடுவாய்
2. சத்துரு எய்திடும் ஆயுதங்கள்
ஒன்றையும் வாய்த்திடாமல் செய்திடுவாரே
உந்தனின் வாழ்வினில் ராஜா அவரே
தீங்கை இனி காணமாட்டாய்
3. எல்லாவற்றிலும் ஜெயம் தந்திடுவாரே
கண்ணீரின் ஜெபத்தைத் தள்ளவே மாட்டார்
எதிர்பார்க்கும் நன்மைகளைத் தந்திடுவாரே
கரம் தட்டி பாடிடுவோம்