innum ummai innum ummai – Innum Ummai Innum ummai Ariyanumae

இன்னும் உம்மை இன்னும் உம்மை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.

இன்னும் உம்மை இன்னும் உம்மை – Innum Ummai Innum ummai Ariyanumae
இன்னும் உம்மை இன்னும் உம்மை அறியணுமே
உந்தன் அன்பை உந்தன் அன்பை புரியணுமே
முழு உள்ளத்தோடும் முழு பெலத்தோடும்
இயேசுவே உம்மை நான் தேடுகிறேன்
என் உயிரே இயேசுவே ஆராதனை – 2
என் பெலவீனங்களில் என் வாழ்வின் சோகங்களில்
தொடர்ந்திட முடியாமல் தவிக்கையிலே – 2
கரம் நீட்டித் தூக்கி என்னை
கன்மலையில் நிறுத்தி
ஆறுதல் அளித்தீரே நன்றி ஐயா – 2
என் உயிரே இயேசுவே ஆராதனை – 2
நல்லவை என்னிடமில்லை நன்மைகள் செய்யவுமில்லை
ஆனாலும் நீர் என்னை நேசித்தீரே – 2
சிலுவையில் உம் ஜீவனைத்தந்து
சிலுவையில் உம் ஜீவனைத்தந்து
எனைமீட்டுக்கொண்டவரே
உம்நாமம் சொல்வதே என் உணவாகணும் – 2
என் உயிரே இயேசுவே ஆராதனை – 2