innum oru tharunam iyesuvin urukkam – 2

இன்னும் ஒரு தருணம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இன்னும் ஒரு தருணம் இயேசுவின் உருக்கம் – 2
என்மேல் அருள புதுபெலனை அடைந்து -2
ஓடுவேன் அவர்க்காய், அவருக்காய் – 2 – இன்னுமொரு
1. நற்பண்பு வடிக்கும் சிற்பியாம் அவரை
அற்பமாய் எண்ணி அகன்றிட துணிந்தேன்
அழிந்திடும் உலக ஆசைகள் மீதில் – 2
நெஞ்சத்தை வைத்து நிம்மதி இழந்தேன் – 2- இன்னும்
2. நான் வந்த பாதையை பின்நோக்கி பார்த்தேன்
தரிசனம் இழந்து தியாகங்கள் மறந்தேன்
குணம் தரும் இயேசுவின் காயங்கள் கண்டும் – 2
கனியற்ற மரமாய் பாதையில் நின்றேன் – 2 -இன்னும்
3. நித்திய அழைப்பின் நோக்கத்தை அறிந்தும்
வேஷமாய் வாழ்வை வீணாகக் கழித்தேன்
பாசமாய் தொனித்த அவர் குரல் கேட்டு – 2
நேசரின் தோட்டத்தில் எனக்காக என்றேன் – 2 -இன்னும்