1.innamum thamathamen

இன்னமும் தாமதமேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

1.இன்னமும் தாமதமேன்
இன்ப சத்தம் கேளாயோ
இன்னலின்றி காத்திட
இன்றுன்னை அழைக்கிறாரே
ஜீவனின் அதிபதி இயேசுவண்டை
நித்திய ஜீவன் உண்டே
நீங்கிடா அவர் அன்பையே
நாடி நீ வந்திடாயோ
2.கல்வாரி மேட்டினிலே
கரங்களை விரித்தவராய்
காத்துன்னை இரட்சித்திட
கனிவுடன் அழைக்கிறாரே
3.லோகத்தின் இன்பமெல்லாம்
மாறிடும் ஷணப்பொழுதில்
மாறிடா நேசர் இயேசு
மாண்புடன் அழைக்கிறாரே
4.நாளை உன் நாளாகுமோ
நாடாயோ நாதனை நீ
நாச லோகை மீட்டிட
நாதன் அழைக்கிறாரே