innal varaiyil kaththa un

இந்நாள் வரையில் காத்த

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இந்நாள் வரையில் காத்த உன்
கருணைக்கு நன்றி என் இறைவா
இனி வரும் நாளும் இந்நாளாக
இரங்கி அருள் புரிவாய்
இறைவா இரங்கி அருள் புரிவாய் – 2
தாயின் கருவில் தரிக்கும் முன்னே நீயும்
என்னை நினைதாய் அழைத்தாய் – 2
தனது குழந்தையை தாயே மறப்பினும் – 2
மறவாதென்னை மகிழ்ந்து காக்கின்றாய் – 2
இந்நாள் வரையில் காத்த உன்
கருணைக்கு நன்றி என் இறைவா
இனி வரும் நாளும் இந்நாளாக
இரங்கி அருள் புரிவாய்
இறைவா இரங்கி அருள் புரிவாய் – 2
என்னென திறமைகள் எனக்கு தந்துள்ளாய்
படைப்பு அனைத்தும் பனிய பனித்தாய் – 2
ஒவ்வொரு நாளுமே நீ தரும் பிச்சை தான் – 2
உணர்ந்து வாழவே உதவி செய்யுவாய் – 2
இந்நாள் வரையில் காத்த உன்
கருணைக்கு நன்றி என் இறைவா
இனி வரும் நாளும் இந்நாளாக
இரங்கி அருள் புரிவாய்
இறைவா இரங்கி அருள் புரிவாய் – 2
இந்நாள் வரையில் காத்த பாடல் வரிகள், Innal Varayil Kaatha Lyrics