ini vathai kootaraththai anukathu

இனி வாதை கூடாரத்தை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இனி வாதை கூடாரத்தை அணுகாது
துன்பம் வந்தாலும் உன்னை தீண்டாதே
இனி சந்தோசம் பொங்குமே .
1. ஏற்ற காலம் நமக்கும் உயர்வு உண்டு
குறித்த நேரம் நாமும் ஜொலிக்க உண்டு
உன்னிடம் ஆசையாய் வந்து சொல்கின்றார்
இனி தோல்வி என்பது கிடையாது
சோதனை வந்தாலும் மேற்கொள்வதே
இனி உற்சாகம் பொங்குமே
2. நல்ல தந்தை தகப்பன் நமக்கு உண்டு
அவரின் நேசம் பாசம் அனைக்குதே இன்று
உன்னிடம் பாசமாய் வந்து சொல்கின்றார்
இனி சோர்வு என்பது கிடையாது
இடர்கள் வந்தாலும் ஜெயம் நம்மோடு
இனி கொண்டாட்டம் பொங்குமே
3.தினமும் வேதம் ஜெபமும் பெலனாய் உண்டு
திருப்பாதம் சுகமாய் அமர உண்டு
நம் அருகிலே வந்து சொல்கின்றார்
இனி வேதனை என்பது கிடையாது
பெலவீனங்கள் மேற்கொள்வதே
இனி அவர் கிருபை (போதுமே ) தங்குமே .
இனி வாதை கூடாரத்தை பாடல் வரிகள், Ini Vaadai Koodarathai Anugathu Lyrics