ingke nonthu kolkiroom – Ingae Nonthu Kollukirom

இங்கே நொந்து கொள்கிறோம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இங்கே நொந்து கொள்கிறோம் – Ingae Nonthu Kollukirom
1.இங்கே நொந்து கொள்கிறோம்
கூடிப் பின்பு நீங்குவோம்,
அங்கென்றும் நீங்கிடோம்.
ஆ, அதுவே இன்பம்
இன்பம், இன்பம், இன்பம்!
ஆ, அதுவே இன்பம்
விண்ணில் என்றும் தங்குவோம்.
2.தேவ தாசர் யாவரும்
தூய மோட்ச வாசரும்
அங்கொன்றாய்ப்பாடுவோம் – ஆ, அது
3.பள்ளிக்கூடம் யாவிலும்
உள்ள நல்ல பாலரும்
அங்கென்றும் தங்குவார். – ஆ, அது
4. எங்கள் நல் உபாத்திமார்,
நேசமுள்ள குருமார்
நீங்காமல் தங்குவார். – ஆ, அது
5.மா சந்தோஷங் கொள்ளுவோம்
யேசுவை நாம் காணுவோம்
சிம்மாசனத்தின் மேல். – ஆ, அது
6.அங்கெல்லாரும் கூடுவோம்
கிறிஸ்துவைக் கொண்டாடுவோம்
ஓயாமல் பாடுவோம். – ஆ, அது