indha belan

இந்த பெலன் நிச்சயமாய்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இந்த பெலன் நிச்சயமாய் என் பெலனல்ல
இந்த காரியங்கள் நிச்சயமாய் என்னாலே சாத்தியமல்ல
என் பெலவீனம் அதிகம்
என் குறைவுகளோ ஏராளம்
என் பெலவீனத்தில் உமது பெலன் பூரணமாய் விளங்குது
என் குறைவுகளில் உம் கிருபை தாராளமாய் விளங்குது
என் தேவனே என் தேவனே
என்னைத் தாங்கிடும் தெய்வமே
உம் அன்பின்றி நான் இல்லை
உம் கிருபையின்றி வாழ்வில்லை
தோல்வி நேரங்கள் வந்தாலும்
சோர்ந்து நான் போகாமலே
தாங்கி என்னை நடத்திடும்
தகப்பனே நீரல்லவோ
என் கண்ணீரைத் துடைக்கிறீர்
என் பாரங்கள் சுமக்கிறீர்
உடைந்த என் உள்ளத்தை
உயர்த்தி மீண்டும் நிரப்புகிறீர்
என் தேவனே என் தேவனே
என்னைத் தாங்கிடும் தெய்வமே
உம் அன்பின்றி நான் இல்லை
உம் கிருபையின்றி வாழ்வில்லை