Inba Yesuvaiyae Thinam Lyrics

இன்ப இயேசுவையே தினம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இன்ப இயேசுவையே தினம் துதித்திடுவேன்
புகழ் பாடி மகிழ்ந்திடுவேன்
இனிமை சுகமே அளித்தார் அவரை
பண்பாடி வாழ்த்திடுவேன் -2
கோரத்தின் எல்லைப் புயலினில்
பேரலை வீசும் கடலினில்
மாளும் பாவி என்னைத் தூக்கி
தோளில் தாங்கி கரை சேர்த்தார்
மகிபன் அருளின் வடிவாம் அவரை
மகிழ்வாய் பாடுகிறேன்
(மகிழ்வாகப் பாடிடுவேம்)
மாந்தர் கைவிட்ட வேளைதனில்
மாமன்னன் இயேசு சேர்த்துக் கொண்டார்
(மாமன்னர் என்னை சேர்த்துக் கொண்டார்)
ஜீவ இரத்தமதால் மீட்டார்
தூய வாழ்வு தனைத் தந்தார் (தூய இரத்தமதால் மீட்டார்)
மகவாய் எடுத்தே அணைத்தார் கரத்தில்
மகிழ்வாய் பாடுகிறேன்
(மகிழ்வாகப் பாடிடுவேம்)
வானக வேந்தன் என்றென்றுமே
வாழ்ந்திடத் தந்தேன் என்னுள்ளமே
வான தூதர் போல நானும்
வாழ்வு காண வாக்குத் தந்தார்
வருவார் அழைப்பார் வானகம் செல்வேன்
வல்லோனை வாழ்த்திடுவேன்
(வல்லோரை வாழ்த்திடுவேம்)