Inba Thunba Nerathilum Lyrics

இன்ப துன்ப நேரத்திலும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி
இன்ப துன்ப நேரத்திலும்
உன் அன்புள்ள இயேசுவைப் பார்
சரணங்கள்
1. இன்பத்தினால் அக மகிழ்ந்து
கிலேசத்தினால் துக்கித்து
சிற்றின்பப் பேரு உலகில்
சிக்கிக் கொண்டு இருக்கும் போதும் – இன்ப
2. சோதனையால் பிடிபட்டு
இடுக்கணில் இருக்கும் போதும்
சாத்தான் உன்னை மேற்கொள்ளும் போதும்
அக்கினியாஸ்திரம் எறியும்போதும் – இன்ப
3. தோழரால் பகைக்கப்பட்டு
மனக்கிலேசம் அடையும் போதும்
உலகம் உன்னை இகழ்ச்சி செய்து
தங்கள் இடத்தை விட்டோட்டும் போதும் – இன்ப
4. அவர் தாமே சோதிக்கப்பட்டு
பாடு நமக்காய்ப் பட்டதினால்
அவர் சோதிக்கப்படும் நமக்கு
உதவி செய்ய வல்லவராம் – இன்ப
5. வறுமையினால் யாசித்து
பாடு மிகப் படும் போதும்
சாத்தான் உன்னைப் பகடி பண்ணி
உன் விசுவாசத்தைக் குறைக்கும்போதும் – இன்ப
6. கடு நோயால் பெலன் குன்றி
பெலவீனத்தால் தள்ளாடி
ஜீவன் உனக்குக் கசப்பாகி
சாவை நீ விரும்பும் போதும் – இன்ப
7. பகைஞரால் கல்லெறியுண்டு
மரண நேரம் கிட்டும்போதும்
பக்தன் ஸ்தேவானைப்போல
தைரியமாய் உன் இயேசுவைப் பார் – இன்ப
8. நான் என் இயேசுவின் தரிசனத்தை
நிமிஷந்தோறும் காண்கிறதால்
நான் தான் பயப்படாதிருங்கள்
என்றவர் என்னைத் தேற்றுகிறார் – இன்ப