Immatum Kakkum Yesuvae Lyrics

இம்மட்டும் காக்கும் இயேசுவே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இம்மட்டும் காக்கும் இயேசுவே
உம்மையென்றும் துதித்திடுவேன்
இம்மட்டும் காக்கும் இயேசுவே
உம்மையென்றும் போற்றிடுவேன்
நன்றியை நான் கூறுவேன்
ஸ்தோத்திரம் சொல்லுவேன்
கலக்கமே இல்லை தயக்கமே இல்லை
எந்தன் ஆயன் இருக்கையிலே
கலக்கமே இல்லை கவலையே இல்லை
எனக்குள் தேவன் இருக்கையிலே
பசும்புல் மேய்ச்சலிலே என்னை போஷிப்பார்
அவரின் தோள்கள் மேலே என்னை என்றும் சுமந்திடுவார்
காணாமல் போன ஆடாய் இருந்தேன்
என்னை தேடி ஓடி வந்தீரே
சிதறி போன ஆட்டுக்குட்டி நானே
என்னை தூக்கி கொண்டாடினிரே
என்னை காப்பாற்ற தொன்னூற்றொன்பதை விட்டீர்
உம் ஜீவன் எனக்கு தந்து ஓ… என்னை மீட்டுக் கொண்டீர்