immattum kaththitta epinesare

இம்மட்டும் காத்திட்ட

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இம்மட்டும் காத்திட்ட எபிநேசரே
இனிமேலும் காத்திடும் நல்நேசரே
பாவியாயிருந்த என்னையுமே
பரிசுத்தமாக்கின என் தெய்வமே (2)
உந்தன் நல்ல நாமம் வாழியவே (4)
சோதனை சூழ்ந்திட்ட நேரங்களில்
சோராமல் காத்தவர் அவரல்லவா-(2)
வேதனை துன்பம் நீக்கி தினம்
வழுவாமல் காத்தவர் அவரல்லவா- (2) – உந்தன் நல்ல
2.மனிதர்கள் கைவிட்ட நேரங்களில்
துணையாக நின்றவர் அவரல்லவா-(2)
பெலவீனம் தாக்கின நேரங்களில்
பெலத்தால் தாங்கினதவரல்லவா-(2) -உந்தன் நல்ல
3.அழுது புலம்பின வேளைகளில்
கண்ணீரை துடைத்தவர் நீரல்லவா-(2)
கலங்கி தவித்த வேளைகளில்
கலங்காதே என்றவர் நீரல்லவா-(2) – உந்தன் நல்ல