immanuvel immanuvel immanuvel

இம்மானுவேல் இம்மானுவேல் இம்மானுவேல்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இம்மானுவேல் இம்மானுவேல் இம்மானுவேல்
இம்மானுவேல் தேவன் நம்மோடு கூட – 2
காலையிலும் மாலையிலும் இம்மானுவேல்
இப்போதும் எப்போதும் இம்மானுவேல் – 2
1. உலகத்தின் ஒளியே மெய்யான ஒளியே
எங்களை ஒளிர செய்பவரே – என்றும்
எங்களை ஒளிர செய்பவரே
பிரகாசமடைந்து மறுரூபமாகி
யுகயுகமாக வாழ்த்திடுவோம் – 2
(இம்மானுவேல்)
2. கண்ணீரை துடைத்து காயங்கள் ஆற்றி
களிகூர செய்யும் அன்பின் தேவா – எம்மை
களிகூர செய்யும் அன்பின் தேவா
கண்ணீர் இல்லாமல் கவலை இல்லாமல்
யுகயுகமாக வாழ்த்திடுவோம் – 2
(இம்மானுவேல்)
3. மரணத்தை வென்று பாதாளம் வென்று
ஜீவனை எமக்கு கொடுப்பவரே – நித்ய
ஜீவனை எமக்கு கொடுப்பவரே
மரணம் இல்லாமல் முடிவு இல்லாமல்
யுகயுகமாக வாழ்த்திடுவோம் – 2
(இம்மானுவேல்)
இம்மானுவேல் பாடல் வரிகள், Immanuel Lyrics