idho sagotharar orumithu

இதோ சகோதரர் ஒருமித்து
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இதோ சகோதரர் ஒருமித்து
வாசம்பண்ணுவது – எத்தனை
நன்மைகள் எத்தனை இன்பமானது -2
அது எத்தனை இன்பமானது
அது எத்தனை சந்தோஷம்
அது எத்தனை மகிழ்ச்சியானதே…
அது ஆரோனுடைய சிரசின் மேலே
ஊற்றப்பட்ட நல்ல தைலம் போல
அபிஷேகம் இறங்கும்
எர்மோன் சீயோன் மலை மேல்
இறங்கும் பனிகள் போல்
அது போல கர்த்தர் நம்மை
என்றும் ஆசீர்வதிப்பாரே
தேவ ஜனங்கள் கூடும் போது
தேவன் வந்திடுவார்
அங்கே என்றும் கிருபை ஜீவன்
தாங்கி நடத்திடுமே