Ezhuputhalin Vaasanai Enkum

எழுப்புதலின் வாசனை எங்கும்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எழுப்புதலின் வாசனை எங்கும் வீசட்டும்
எழுப்புதலின் அக்கினி பற்றிப் பிடிக்கட்டும்
எழுப்புதலால் உள்ளங்கள் இன்றே மாறட்டும்
பிரிவினை அகலட்டும் தேவ அன்பு பெருகட்டும்
தேவனின் ராஜ்யம் கட்டப்படட்டும்(2)
ஒன்று சேர்ந்து நாம் உழைப்போம்
ஒன்று சேர்ந்து நாம் ஜெபிப்போம்”
ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்
தேவ ராஜ்யம் கட்டுவோம்
பாரம்பரியங்களை விட்டுவிடுவோம்
நம் பாரதம் மீட்டிட பாடுபடுவோம்
கிறிஸ்துவின் சிந்தையை
தரித்துக் கொள்வோம்
இயேசுவை உலகிற்கு காட்டிடுவோம்
சபைகளின் வித்தியாசம் களைந்து
ஒரே சரீரமாக சேர்ந்து உழைப்போம்
தேவனின் அன்பால் நிறைந்திடுவோம்
எழுப்புதல் மழையில் நனைந்திடுவோம்
ஆதி அன்பிற்கு திரும்பிடுவோம்
அழைத்த அழைப்பிலே நிலைத்திருப்போம்
அழைத்த நோக்கத்தை மறந்திடாமல்
அழைத்தவரின் சித்தம் செய்து முடிப்போம்
எழுப்புதலின் வாசனை எங்கும் பாடல் வரிகள், Elupputhalin Vaasanai Engum Veesattum Lyrics