ezhuputhalai kaanum varai

எழுப்புதலைக் காணும் வரை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எழுப்புதலைக் காணும் வரை
ஜெபித்துக் கொண்டே இருப்பேன்
எந்நாளும் ஜெபித்துக் கொண்டே இருப்பேன் (2)
ஜெபமே என் ஜீவனே
ஜெபமே என் சுவாசமே (2)
இரவும் பகலும் ஜெபித்திடுவேன்
இயேசையா உம் பாதம் அமர்ந்திருப்பேன் (2)
1. அபிஷேக மழை பொழியட்டும்
பெருமழையாய் பொழியட்டும் (2)
ஜெபிக்கின்றேன் ஜெபிக்கின்றேன்
அபிஷேக மழை பொழியட்டும்(2)
2. ஜீவனைத் தாருமையா
உலர்ந்த எலும்புகளில் (2)
ஜெபிக்கின்றேன் ஜெபிக்கின்றேன்
ஜீவனைத் தாருமையா (2)
3. என் தேசம் (இந்தியா) உம்மைக் காணட்டும்
இயேசுவே உம்மைக் காணட்டும்(2)
ஜெபிக்கின்றேன் ஜெபிக்கின்றேன்
என் தேசம் (இந்தியா) உம்மை காணட்டும் (2)