ezhupputhalai en kangal

எழுப்புதலை என் கண்கள் காணும்மட்டும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எழுப்புதலை என் கண்கள் காணும்மட்டும்
உம்மை அமர்ந்திருக்க விடுவதில்லையே
எழுப்புதல் தேசத்தில் பரவும்மட்டும்
நாங்கள் ஓய்ந்திருப்பதும் இல்லையே
உயிர்ப்பியும் ஆவியானவரே
தந்திடும் ஆத்ம பாரத்தை
திறப்பிலே நாங்கள் நின்றிட
திரும்பவும் எங்களை உயிர்ப்பியும்
1. ராஜாக்கள் யுத்தம் செய்யும் காலமிது
யூதாவின் வம்சமாய் எழும்பிடு
யுத்தத்தில் சிறந்த குதிரையாய்
எழும்பி நீ முன் சென்றிடு – 2
2. அக்கினி வார்த்தை உன் வாயினில்
அக்கினி நெருப்பு உன் கண்களில்
சாத்தானின் திட்டங்களை முன்னறிந்து
மிதித்து நீ சாம்பலாக்கிடு – 2
3. மக்னாயிம் என்பது உன் நாமம்
இரண்டு சேனைக்கு இணை நீ
பாதாளம் பூலோகம் உன்னிமித்தம்
நடுங்க நீ எழும்பி செயல்படு