ezhuntharulvay theva – Eluntharulvaai Deva

எழுந்தருள்வாய் தேவா
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Wedding Songs collection.

எழுந்தருள்வாய் தேவா – Eluntharulvaai Deva
பல்லவி
எழுந்தருள்வாய், தேவா எழுந்தருள்வாய், தேவா!
இங்கிரங்கி மங்களமாய் எழுந்தருள்வாய்.
சரணங்கள்
1.தொழுந்தலங்கள் எழுந்தருளி
செழும்பலன்கள் பொழிவதாக!
சொன்னமொழி ‘ பின்னமின்றி
நன்னயமாய் இன்னேரம்.
2.தம்பதிகள் கெம்பீர நின்
செம்பதமே நம்பி வாழி;
சாற்றும் ஆசி ஊற்றும் ஆவி
போற்றும் உள்ளம் தேற்றும் ராஜா.