Ezhumbu Seeyone Un vallamaiyai

எழும்பு சீயோனே உன் வல்லமையை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Ezhumbu Seeyone Un vallamaiyai – எழும்பு சீயோனே உன் வல்லமையை
எழும்பு (4) சீயோனே
உன் வல்லமையை தரித்துக்கொண்டு எழும்பிடு
எழும்பு (4) சீயோனே
உன் தூசியை உதறிவிட்டு எழும்பிடு
காலமில்லையே நேரமில்லையே -2
இது அறுவடையின் காலமல்லவா -2
பாவத்தை உதறிவிட்டு எழும்பிடு
சாபத்தை உதறிவிட்டு எழும்பிடு
இயேசுவின் பிள்ளையை நீ வாழ்ந்திடு
இது இரட்சிப்பின் காலமல்லவா – காலமில்லையே
அன்பு உனக்கு வேண்டுமே
சமாதானம் உனக்கு வேண்டுமே
சந்தோசம் உனக்கு வேண்டுமே
இது கனி கொடுக்கும் காலமல்லவா – காலமில்லையே
ஆவியிலே பெலன் கொண்டு எழும்பிடு
அழிந்து போகும் ஆத்துமாவை மீட்டிடு
உலகமெங்கும் இயேசு நாமம் சொல்லிடு
இது எழுப்புதலின் காலமல்லவா – காலமில்லையே