ethuvum ingke itara seyya ninaiththita ventam

எதுவும் இங்கே இடற செய்ய
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

எதுவும் இங்கே இடற செய்ய நினைத்திட வேண்டாம்
எதுவும் மனதில் அமைதியை குலைத்திட வேண்டாம் -2
காலங்கள் மாறி போனாலும்
கோலங்கள் அழிந்து போனாலும் -2
மாறாதவர் என் தேவனே
இயேசு எந்தன் நல்லாயனே -2 – எதுவும் இங்கே
1.பசுமையான புல்வெளியில் பசியை போக்கிடுவார்
பாய்ந்து ஓடும் அருவியிலே தாகம் தீர்த்திடுவார்-2
வழியில் தொலைந்து போகையில் தேடி வந்திடுவார்
மார்பில் அணைத்து தோளில் சுமந்து வாழ செய்திடுவார்-2 -மாறாதவர்
2.பள்ளத்தாக்கின் இருளில் எனக்கு பாதை காட்டிடுவார்
கருமையன மேகம் சூழ ஒழியாய் நின்றுடுவார்-2
காயம் ஆற நோய் தீர சுகமே தந்திடுவார்
கலக்கம் போக்கி கவலை நீங்கி வாழ செய்திடுவார் -2 -மாறாதவர்
எதுவும் இங்கே இடற செய்ய பாடல் வரிகள், Ethvum Ingae Idara Seiya Lyrics