eththanaiyoo nanmaikalai en vazhvil seythare

எத்தனையோ நன்மைகளை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எத்தனையோ நன்மைகளை என் வாழ்வில் செய்தாரே
அத்தனையும் நினைத்து நான் நன்றி சொல்லுவேன் (2)
நன்றி சொல்லுவேன் துதித்துப் பாடுவேன்
நன்மைகளின் நாயகனை புகழ்ந்து பாடுவேன் (2) – எத்தனையோ
கர்ப்பத்தின் கனிகளுக்கு இரங்கிடுவார்
பிள்ளைகளின் பிள்ளைகளை ஆசீர்வதிப்பார் (2)
ஒலிவ மர கன்றுகள் போல் செழிக்க செய்வார்
சமாதான பாதையிலே நடத்திடுவார் (2) – நன்றி சொல்லுவேன்
ஏற்ற காலம் உன்னை என்றும் உயர்த்திடும்படி
கை செய்யும் காரியத்தை ஆசீர்வதிப்பார் (2)
வானத்தை உனக்காக திறந்திடுவார்
நிறைவான விளைச்சலை கொடுத்திடுவார் (2) – நன்றி சொல்லுவேன்
ஜீவன் சுகம் பெலன் தந்து உன்னை நடத்துவார்
பெலவீனம் யாவையும் நீங்கிட செய்வார் (2)
கீர்த்தியோடும் புகழ்ச்சியோடும் வாழ்ந்திட செய்வார்
சந்தோஷம் உன் வாழ்வில் தந்திடுவார் (2) – நன்றி சொல்லுவேன்